நெருப்பில் விழுந்து எழுந்த விஷ்ணு! - கர்நாடகாவில் கோலா திருவிழா
கர்நாடகாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'ஒத்தெகோலா' திருவிழா நேற்று தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாவிஷ்ணு நெருப்பில் விழும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. குடகு மாவட்டம், கல்லுகுண்டி என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில், பெரிய நெருப்பிடம் அமைக்கப்பட்டது. அதில் மகாவிஷ்ணு போல் வேடமணிந்த பக்தர், நெருப்பில் விழ, அவரை மற்ற பக்தர்கள் பின் இழுத்தனர். இந்த நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிகழ்வைக் கண்டு கடவுளிடம் தங்களது கஷ்டங்களைக் கூறினால், கஷ்டங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST