'இதுபோன்ற செயல்களால் கள்ளழகர் சிலைக்குப் பாதிப்பு ஏற்படும்'- பாலாஜி பட்டர் பேட்டி - பாலாஜி பட்டர் பேட்டி
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற இத்திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அழகர்கோயில் பட்டர் பாலாஜி கூறுகையில், 'கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்போது காலங்காலமாக பக்தர்கள் விசிறி வீசியும், கள்ளழகரைபோல் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சியும், திரி எடுத்தும், சக்கரை தீபம் ஏற்றியும் வரவேற்று வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இதில் தண்ணீர் பீய்ச்சும் வேண்டுதலின் தவறான வழிமுறைகள் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என அழகருடன் தங்கக்குதிரையில் வரும் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
பாலாஜி பட்டர் பேட்டி