நெல்லையில் தாய் நாய் பாச போராட்டம்! - மழையில் நனைந்த குட்டி
திருநெல்வேலி: திடீரென்று பயங்கர இடி மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தின் வாசல் பகுதியில் தண்ணீர் குளம் போல் சேர்ந்து விட்டது. அப்போது மழையில் முழுவதும் நனைந்த தாய் நாய் ஒன்று தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு விளையாட்டு அரங்கத்தின் வாசலில் வந்து நின்றது. கண் திறக்காத நாய்க்குட்டி முழுவதும் நனைந்து குளிர் தாங்காமல் கத்திக்கொண்டிருந்தது. குளிருக்கு நடுங்கிய குட்டியை பாதுகாக்க தாய் நாயின் வேதனையைப் பார்த்து அங்கு மழைக்கு ஒதுங்கி இருந்த பத்திரிகையாளர்கள் சிலர், மழைநீர் படாதவாறு துணி விரித்து நாய்க்குட்டியை பாதுகாப்பாக வைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST