தான முளைத்த முத்து மாரியம்மன் கோயில் திருவிழா: களைகட்டியது ஜல்லிக்கட்டு போட்டி! - முத்து மாரியம்மன் கோயில் திருவிழா
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அளுந்தூர் கிராமத்தில் "தான முளைத்த முத்து மாரியம்மன்" கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி போட்டியை தொடங்கி வைத்தார். திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், மதுரை, மாவட்டங்களில் இருந்து 600 ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முற்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST