பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்! - நகை பறிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள, பீட்டா 2 காவல் நிலைய பகுதியில் ஒரு பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை இரண்டு பேர் பறித்துச் சென்றனர். அந்த பெண் தெருவோர தள்ளுவண்டிக் கடையில் பழங்களை வாங்கிக் கொண்டிருந்தார். இதில் அந்த பெண் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது. கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், கண்காணிப்புப் படக்கருவியின் காட்சிப் பதிவுகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.