ஜம்தாரா சைபர் க்ரைம் திருடர்கள்! - சைபர் க்ரைம் திருடர்கள்
சர்வதேச மக்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்டத்தை அறிந்துள்ளனர். ஜம்தாராவிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு உங்களுக்கும் மோசமான ஒன்றாக அமைந்திருக்கலாம். இப்போது ஜார்கண்டின் மற்றொரு மாவட்டமான தியோகர், புதிய ஜம்தாராவாக மாறிவருகிறது. தியோகர் என்றால் கடவுள் வாழும் பூமி என்று பொருள். அன்று ஆன்மிக தலமாக அறியப்பட்ட இந்நகர் தற்போது சைபர் க்ரைம் குற்றவாளிகளின் கூடாரமாய் மாறியுள்ளது.