பைனான்சியர் சுரேஷ் லால்வானிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு
சென்னை ரித்தர்டன் சாலையில் உள்ள சுப்பையா தெருவில் பைனான்சியர் சுரேஷ் லால்வானிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கட்டுமானம் மற்றும் வாகனத்திற்கு பைனான்சியராக இருந்து வருகிறார். இன்று (மார்ச்.2) காலை 7 மணிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது மகன் சுனில் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொண்டு வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST