கொண்டாட்டங்களுக்கு திரும்பியுள்ள வூஹான்! - வூஹானில் கரோனா தொற்று
பெய்ஜிங்: கரோனா தொற்று முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சுமார் 1.1 கோடி மக்கள்தொகையை கொண்ட வூஹான் நகரம் முழுவதும், ராணுவத்தின் உதவியுடன் சுமார் இரண்டு மாதங்கள் எவ்வித தளர்வுகளும் அற்ற கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போதும் இந்தியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா தொற்று கடுமையாக இருந்தாலும், சீனாவில் இந்தத் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தற்போது எவ்வித கட்டுப்பாடுகளும் அமலில் இல்லை என்பதால், வூஹான் நகரில் மிகப் பெரிய பார்ட்டி நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.