உலகின் மிக உயர பிரமாண்ட ராட்டினம் - AIN DUBAI
துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய, மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. துபாயின் ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள இந்த ராட்டினத்திற்கு ஐன் துபாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் 820 அடி (250 மீ). இதற்கு முன்னதாக, லாஸ் வேகஸில் உள்ள 'ஹை ரோலர்' ராட்டினம் உலகின் மிக உயர ராட்டினமாக இருந்தது. இதன் உயரம் 550 அடி (167.6 மீ).