பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கம்பளி காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுப்பு! - கம்பளி காண்டாமிருகம் தொடர்புடைய செய்திகள்
பனி பிரதேசங்களில் வசிப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்ட கம்பளி காண்டாமிருகம் (woolly rhino) ஒன்றின் உடல், சைபீரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பனியில் உறைந்து கிடந்ததால், அதன் உடலில் உள்ள குடலின் சில பகுதிகள், முடி, கொம்பு உள்ளிட்டவை மக்காத நிலையில் கிடைத்துள்ளன. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனி யுகத்தை (Ice age) சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.