முதன்முறையாக ஆரஞ்ச் நிறத்தில் பெலிகன் - வியந்த ஆராய்ச்சியாளர்கள்! - இஸ்ரேல்
ஜெருசேலம்: இஸ்ரேலில் ரமத் கன் சஃபாரி பூங்கா ஊழியர்கள், சிறகு அடிபட்ட நிலையில் கிடந்த ஆரஞ்ச் நிறத்திலான பெலிகானை மீட்டு சிகிச்சையளித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த பறவையின் நிறம் ஆக்ஸிஜனேற்றப்பட்ட நீரினால் மாற்றம் அடைந்திருக்கலாம். நாங்கள் பறவை பார்த்ததும் வர்ணம் பூசப்படவில்லை என்பதை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் சுத்தம் செய்தோம்" என்றனர்.