பெய்ரூட் வெடிவிபத்திற்காக ஏசுநாதர் முன் அஞ்சலி செலுத்திய பிரேசில் மக்கள் - லெபனான் வெடி விபத்து
பிரேசிலியா: லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரில் ஏற்பட்ட கோர வெடிவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நகரமே சேதமடைந்துள்ளதால் அந்நகரை சீரமைக்க உலக நாடுகள் தங்கள் உதவிக்கரத்தை நீட்டியுள்ளன. இந்த சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரேசில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ரியோ டி ஜெனிரோ நகரின் ஏசுநாதர் சிலை வண்ண விளக்குகளால் ஒளியேற்றப்பட்டது. ஏசுநாதரின் உடலில் லெபனான் கொடியுடன் ஒளியேற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.