மெக்சிகோ கடலில் உலா வரும் புதிய வகை திமிங்கலங்கள்! - சர்வதேச செய்திகள்
மெக்சிகோ: பெர்ரின் திமிங்கலம் குறித்து சான் பெனிடோ தீவு பகுதியில் உள்ள கடலில் ஆய்வு மேற்கொண்டபோது, புதிதாக இரண்டு திமிங்கலத்தைக் கண்டதாக மெக்சிகோ கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த திமிங்கலங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட 23 வகை திமிங்கலங்களிலிருந்தும் வேறுபட்டவை. கடல் நீர் மற்றும் திமிங்கல செல்களின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின்படியே, அதை உறுதி செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.