துருக்கியில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ! - துருக்கி தீ விபத்து
அங்காரா: துருக்கியில் உள்ள காட்டுப்பகுதியில் ஜூலை 29ஆம் தேதி பரவிய காட்டுத்தீ, தொடர்ந்து ஐந்தாவது நாளாக கட்டுகடங்காமல் பரவி வருகிறது. இதுவரை எட்டு பேர் இந்தக் காட்டுத் தீயில் உயிரிழந்துள்ளனர். தற்போது தீ முகலா குடியிருப்பு பகுதியில் பரவி வருவதால், அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.