265 அகதிகளை மீட்ட என்ஜிஓ கப்பல் - அகதிகள் மீட்பு
மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்தும், லிபியா கடற்கரையோரத்தில் இருந்தும் இதுவரை 265 அகதிகளை மீட்டுள்ளதாக தி ஓப்பன் ஆர்ம்ஸ் தொண்டு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. அந்நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் எரிட்ரியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.