காட்டுத் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட கோலா கரடிகள் பாதுகாப்பாக காட்டுக்குள் விடப்பட்டன - கோலா கரடி
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயங்கர காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கோலா கரடிகள் சிக்கி உயிரிழந்தன. அப்போது வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்ட 14 காயமுற்ற கோலா கரடிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த கரடிகள் மீண்டும் அதே காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளன. மேலும் கோலா கரடிகளின் செயல்பாடுகளை அறிய, அதன் உடம்பில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு வனத்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.