அமெரிக்காவில் கடும் பனி: பொதுமக்கள் அவதி! - சாலைகளை சூழ்ந்த பனியால் வாகன ஓட்டிகள் அவதி
அமெரிக்க நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடும் பனி பொழிவால் சாலைகளின் நடுவே மலைபோல் பனி குவிந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பனியால் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பனிபோர்வையில் மூடியதுபோல் காட்சியளிக்கிறது. இதனால், பல பகுதிகள் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.