காணொலி: லாஸ் ஏஞ்சல்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! - அமெரிக்கா காட்டுத்தீ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்திற்கு வடக்கே 30 மைல் தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் சாண்டா கிளாரிட்டாவில் நேற்று (ஆகஸ்ட் 6) பிற்பகல் காட்டுத்தீ பற்றி எரிந்தது. 150 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்த காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் நாடு முழுவதும் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் சாலைகள் அனைத்தும் அப்பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.