ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் வீசும் உலக சாம்பியன்ஷிப்! - christmas tree throwing championship at Germany
பெர்லின்: ஜெர்மனியில் வெயிடெண்தல் (Weidenthal) பகுதியில் கிறிஸ்துமஸ் மரம் வீசும் (ஒருவகை விளையாட்டு) உலக சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை உபயோகித்து உயரம் தாண்டுதல் (High jump), ஈட்டி எறிதல் (javelin throw), நூற்பு (spinning) என மூன்று சுற்றுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும். பெண்களுக்கான போட்டியில் சியர்ஸ்பர்கைச் (Siersburg) சேர்ந்த மார்கிரேட் கிளீன் ராபரும், ஆண்கள் போட்டியில் வெயிடெண்டலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மில்லோத் வெற்றிபெற்றனர். வெற்றியாளர்களுக்கு மரத்தால் செய்யப்பட்ட சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.