ஏமன் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்ட குறியா? - அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்ட குறியா
சனா: ஏமன் நாட்டில் புதிதாக அமைந்த அரசின் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள அமைச்சர்கள், சவூதியிலிருந்து அந்நாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அமைச்சரவை உறுப்பினர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவத்தின் போது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாகவும் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.