'என்னை யாருக்குமே பிடிக்கவில்லை...!' - காப்பாளரின் மடியில் சோகத்தில் படுத்த யானைக்குட்டி! - orphange baby elepahant
பேங்காக்: தாய்லாந்தில் இரண்டு வயது யானைக் கன்று, தனியாகச் சேற்றில் மாட்டித் தவித்துள்ளது. அதனை மீட்ட வனத் துறையினர் ஐந்த மாதங்கள் அதனை பத்திரமாகப் பராமரித்து யானைக் கூட்டத்துடன் விட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வனப்பகுதிக்குச் சென்றபோது அந்த யானைக் குட்டி தனியாகச் சோகமாகத் திரிந்துள்ளது. இதனைப் பார்த்த அலுவலர்கள் அதனை மீண்டும் காப்பகத்துக்கு அழைத்து வந்துவிட்டனர். தற்போது அந்த யானைக் குட்டி சோகமாக வன அலுவலர் மடியில் படுத்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : Oct 2, 2019, 6:10 PM IST