உக்ரைன் போர் - மகளை மீட்கக்கோரி பெற்றோர் அரசுக்கு கோரிக்கை - Russia - Ukraine
ஈரோடு: அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் - குணவதி தம்பதியினரின் மகள் மவுனிசுகிதா (20). உக்ரைனிலுள்ள லையு நேசனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில், மூன்றாமண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என மாணவி மவுனிசுகிதா, வாட்ஸ் அப் மூலம் பேசி, பெற்றோருக்குத் தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, தனதுமகளை மீட்டுத்தரும்படி, அவரது பெற்றோர் உருக்கமாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST