ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் - பிலிகுண்டு
கர்நாடக மாநிலத்தில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்து 5 ஆயிரத்து 100 கன அடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 500 கன அடி நீர் என 14 ஆயிரத்து 600 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுவுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.