வால்பாறை சாலையில் ஒற்றைப் புலி: காணொலி வைரல் - வால்பாறை சாலையில் உலாவந்த ஒற்றை புலி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, புலி, புள்ளிமான், வரையாடு, இருவாட்சி அபூர்வ பறவையினங்கள், தாவரங்கள் நிறைந்துள்ளன. வால்பாறை கவர்கல் அருகே உள்ள ஊமையாண்டி முடக்கு சாலை வழியாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, புலி ஒன்று வந்தது. இதைச் சுற்றுலாப் பயணி தனது மொபைலில் காணொலியாக எடுத்துள்ளார். தற்பொழுது அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.