சொல் பேச்சு கேட்ட பாம்பு! திரும்பி போடா என்றதும் சென்றது! வைரல் காணொலி - கோவை செய்திகள்
கதிர்நாயக்கன்பாளையம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது வீட்டு முன்பு ஜன.28ஆம் தேதி கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வந்தது. அதனைக் கண்ட அவர், உடனடியாக வீட்டின் கேட்டை சாத்திவிட்டு பாம்பை பார்த்து திரும்பிபோ.. இங்கே.. வராதே..! காட்டுக்குள் போ.. என்று குழந்தையை விரட்டுவது போல விரட்டுகிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பாம்பும் அவர் பேச்சை கேட்டு செல்கிறது. இந்தப் பாம்பை பின்னர் வனத்துறையினர் பிடித்து வனத்துக்குள் கொண்டு விட்டனர்.