கல்வித்துறைக்கு வரவேற்பும், ஏமாற்றமும் உள்ள 2022 பட்ஜெட் - கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி
சென்னை: மத்திய பட்ஜெட் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, கல்வித்துறைக்கு அளித்துள்ள பட்ஜெட்டில் சில வரவேற்கத்தகுந்த திட்டங்களும், சில ஏமாற்றங்களும் இருக்கின்றன. டிஜிட்டல் பல்கலைக் கழகத் திட்டம் வரவேற்க வேண்டியதாகும். ஆன்லைன் மூலம் அதிகளவில் கற்க முடியும். அதேபோல் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் மாநில மொழி ஊக்குவிக்கப்படும் என்பதும், வேலை வாய்ப்பிற்கான திறன்களை அதிகரிக்கும் திட்டம் ஆகியவையும் பாராட்ட வேண்டியது என்றார்