அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 103 ஜெல்லடின் குச்சிகள் பறிமுதல்... ஒருவர் கைது - றக்கும்படை குழுவினர் வாகன சோதனை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், அம்பேத்கர் நகர் பகுதியில் தேவகுமார் தலைமையிலான பறக்கும்படைக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக கொடும்மாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அனுமதியின்றி கொண்டு சென்ற 103 ஜெலட்டின் குச்சிகளைப் பறிமுதல் செய்து, ராஜேந்திரன் என்பவரைப் பிடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.