வெகு விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் - வெகு விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்
கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலமைச்சர் மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதற்காக முயற்சி எடுத்தார்கள். 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வெகு விரைவில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள பல கட்ட ஆராய்ச்சி நடத்தப்படுகிறது" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST