தமிழ்நாடு

tamil nadu

ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி முட்டை மசால்

ETV Bharat / videos

வீடியோ: ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி "ஊறுகாய் முட்டை மசால்" - முட்டை சத்துக்கள்

By

Published : Mar 5, 2023, 3:59 PM IST

Updated : Mar 5, 2023, 6:21 PM IST

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் சுவையான சத்தான ரெசிப்பீஸ்களை செய்து அசத்துங்கள். முட்டை மசால் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால், சில நிமிடங்களில் முட்டை மசால் செய்து முடிக்கலாம். இந்த மசால் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்படி சுவையாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வழக்கமான முட்டை ரெசிப்பீஸ்களைவிட சற்று வித்தியாசமான சுவையில் இது இருக்கும். 

ஒரு முட்டையில் வைட்டமின் டி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்குகள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கு மிகவும் அவதியமானதாகும். இந்த முட்டை மாசால் செய்ய முதலில் வேகவைத்த 4 முட்டைகளை எடுத்துகொள்ளவும். இந்த முட்டைகளின் மஞ்சள் கருவை வேக வைத்த ஒரு கப் உருளைக்கிழக்குடன் சேர்ந்து நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் மயோனைஸ், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி இலை 2 டீஸ்பூன், மிளகு தூள் ஒரு டீஸ்பூன், ஊறுகாய் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது சுவையான மாசால் ரெடி, இதை முட்டையின் வெள்ளைக் கரு உடன் சேர்ந்து பரிமாறிக் கொள்ளலாம். 

Last Updated : Mar 5, 2023, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details