ஹோலி பண்டிகை ஸ்பெஷல் ரெசிப்பி: "ஹரா பாரா கேபாப்" - கேபாப் செய்வது எப்படி
ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் "ஹரா பாரா கேபாப்" ரெசிப்பி செய்து அசத்துங்கள். மனமனக்கும் மசாலா உடன் தயாராகும் உருளைக் கிழங்கு கேபாப், மட்டன், சிக்கனுக்கு சவால் விடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். முதலில் 2 டிஸ்பூன் கடலை மாவு எடுத்து நன்றாக மணம் வரும் வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் 2 டிஸ்பூன் எண்ணெய்யை தவாவில் ஊற்றி சூடான பின், இஞ்சி 1 டிஸ்பூன் சேர்ந்து வதக்கவும். இதையடுத்து துருவிய பச்சை மிளகாய் 1 டிஸ்பூன், பச்சை பட்டாணி 1 கப், கரம் மசாலா 1 டிஸ்பூன், சிறிதளவு பெருங்காயம், 1 டிஸ்பூன் உப்பு போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதனுடன் ஒரு கொத்து பாலக் கீரை மற்றும் அரை கப் கொத்தமல்லி இலை சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். மூன்று வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அத்துடன் மிக்சியில் அரைத்து வைத்திருந்த கூட்டை சேர்ந்துக்கொள்ளவும், அதோடு வறுத்த கடலை மாவையும் சேர்க்க வேண்டும். இதை நன்றாக பிசைந்து, இறுதியில் பிரட் தூளை சேர்த்து பிசையவும். இறுதியாக கேபாப் வடிவில் உருட்டி எடுத்து கொள்ளவும். இதை எண்ணெய்யில் வறுத்து எடுத்தால் கமகம ஹரா பாரா கேபாப் ரெடியாகிவிடும்.