பெண்களின் வாழ்க்கையை மாற்றிய முடிவு! - மகாதேவி
வட கர்நாடகாவில் உள்ள கல்புர்கிக்குச் சென்றால் வகை வகையான ரொட்டிகளை நீங்கள் சுட சுட ருசிக்கலாம். சாப்பிட சாப்பிட உமிழ் நீர் சுரக்கும், உயிரினுள் இனிக்கும். அடடா என்ன சுவை... என்ன சுவை என்று நாள் முழுக்க மனது நினைக்கும். வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறாது. ஆனால், ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கையை மாற்றிவிடும். இதற்கோர் உதாரணம் மகாதேவி... ரொட்டி தயாரிப்பின் மூலம் தானும் உயர்ந்து, ஏராளமான பெண்களையும் வறுமையிலிருந்து விடுவித்தவர். பெண்களின் வாழ்க்கையை மாற்றிய முடிவு குறித்து பார்க்கலாம்.