குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சோனைமுத்து கருப்பணசாமிக்கு மதுபானப்படையல்... - Every year there is a great festival going on
தேனி: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆடிப்பெரும் திருவிழா நடந்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெரும் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 23ஆம் தேதி திருக்கொடியேற்றப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை பூஜைகள் நடத்தி திருக்கல்யாண விழாவையும் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். இந்நிலையில் ஆடிப்பெரும் திருவிழாவில் நேற்று சோனைமுத்து கருப்பணசாமிக்கு மது பாட்டில்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தனர். அதன்பின்னர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 25 ஆடுகள் மற்றும் 45 கோழிகளை பலி கொடுத்து அசைவ உணவு வழங்கும் அன்னதானம் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST