ஆழியார் அணைப் பகுதியில் திடீர் தீ விபத்து - கோவை செய்திகள்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணைப் பகுதியில் நேற்று (மார்ச் 5) மதியம் சுற்றுலா பயணி ஒருவர் புகை பிடித்து விட்டு கீழே போட்டுச் சென்றதில் புற்களில் தீ பற்றியது. கோடை வெயிலின் தாக்கத்தால் புற்கள் காய்ந்து இருந்த நிலையில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST