'மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்' - உயிருக்குப்போராடும் குழந்தையைக் காப்பாற்ற தந்தையின் பாசப்போராட்டம்! - மகனுக்கு மூச்சு கொடுத்த தந்தை
பீகார் மாநிலம், பீரோ பஜார் என்ற பகுதியில் வசிக்கும் அர்ஜூன் சவுத்ரி என்பவரின் 2 வயது குழந்தை ரிஷப், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கால்வாயில் தவறி விழுந்து சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த தந்தை குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் யாரும் இல்லை, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி ஊழியர்கள் கூறியுள்ளனர். உடனடியாக தந்தை குழந்தையை பைக்கில் வைத்துக்கொண்டு, தன் வாயை வைத்து மூச்சு கொடுத்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST