சசிகலா தலைமை ஏற்க வேண்டும்..டிடிவி வழிநடத்த வேண்டும் - முன்னாள் எம்எல்ஏ - அதிமுகவில் சசிகலா
கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், " உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக தலைமை சரியில்லாமல் போனது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் பொதுமக்கள் அதிமுகவை விரும்பவில்லை. அமமுக, அதிமுக இணைந்து சசிகலா தலைமையில் டிடிவி வழிகாட்டுதலில் செயல்பட்டால்தான் அதிமுக மீண்டும் வரும். தற்போது உள்ள இரட்டை தலைமையை மக்கள் ஏற்காததால் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. தோல்வி காரணமாக அதிமுக தொண்டர்கள் தொய்வடைந்து உள்ளனர். அனைவரும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்" என தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST