வீடியோ: ஜெய் சால்மருக்கு வந்தடைந்த மணமகள் கியாரா அத்வானி - நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த கியாரா அத்வானிக்கும் பாலிவுட் முன்னணி நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் ராஜஸ்தானின் ஜெய் சால்மரில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மணமகள் கியாரா அத்வானி ஜெய் சாலிமர் சென்றடைந்தார்.
கியாரா ஜெய்சல்மர் விமான நிலையம் வந்தடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது. இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அந்த வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், விக்கி கௌஷல், அவரது மனைவி கத்ரீனா கைஃப், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.