Video: ’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..!' - விக்ரம் - விக்ரம்
பொன்னியின் செல்வன் படம் விளம்பரத்திற்காக திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களுக்கு நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை திரிஷா சென்றனர். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விக்ரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “பொன்னியின் செல்வன் படத்திற்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் போது வரவேற்பு செம்மையாக இருந்தது நமது சோழர்களின் பெருமையை சொல்லும் போது மற்ற மாநிலத்தவர்களும் சோழர்களை கொண்டாட தொடங்கி விட்டனர். சோழர்களின் பெருமையை சொல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியாக ரொம்பவும் பெருமையாக இருந்தது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...!” எனக் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST