மறைந்த வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி... - வாணி ஜெயராம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் வாணி ஜெயராம். மத்திய அரசால் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை வாங்குவதற்கு முன்னரே அவர் மறைந்திருப்பது வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.