Maaveeran: குடும்பத்துடன் 'மாவீரன்' திரைப்படம் பார்த்த சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர்!! - மடோன் அஷ்வின்
சென்னை: இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் ஆகியோர் நடித்து உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படம் இன்று திரைப்படங்களில் வெளியாகியுள்ளது. இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கிய முதல் திரைப்படமான ‘மண்டேலா’ தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்நிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் 'மாவீரன்' படம் பார்க்க வருகை தந்தார்.
மேலும் அதிதி ஷங்கர் தனது குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு வருகை தந்தார். இன்று மாவீரன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள 'அயலான்' திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.