Video:கொடைக்கானலில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கைப்பாதிப்பு - பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்வது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளான பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, பேருந்து நிலையம் பகுதி, பூங்கா பகுதி, ஆனந்தகிரி, நாயுடுபுரம், பள்ளங்கி, வில்பட்டி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST