வீடியோ: பெரியகுளம் வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தேனி: பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவு எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராகநதி ஆற்றில் கலந்து செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
தேனி வராகநதி