தமிழ்நாடு

tamil nadu

அமிதாப் பச்சன் 81வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 1:57 PM IST

Updated : Oct 11, 2023, 4:09 PM IST

ETV Bharat / videos

Amitabh Bachchan Birthday: அமிதாப் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன், இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து நேற்று நள்ளிரவு அமிதாப் பச்சனுக்கு சொந்தமான ’ஜல்சா’ பங்களா முன் திரண்ட ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனைக் கண்ட அமிதாப் பச்சன் தனது ஜல்சா பங்களாவில் இருந்து வெளியில் வந்து, தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களிடம் நன்றி தெரிவித்தார். 

அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சனை நேரில் கண்ட ரசிகர்கள், விசிலடித்து கத்தி கூச்சலிட்டனர். அமிதாப் பச்சன் தற்போது 'கணபத்', 'கல்கி 2898 AD', ரஜினிகாந்தின் 170வது படம் என பல படங்களில் நடித்து வருகிறார். 

அமிதாப்பச்சனும் ரஜினிகாந்தும் 32 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இருவரும் இந்தியில் ’ஹம்’ படத்தில் இணைந்து நடித்தனர். மேலும், அமிதாப் பச்சன் இந்தியில் மிகவும் பிரபலமான 'kaun banega crorepati' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Last Updated : Oct 11, 2023, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details