Video:தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக களத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்!
திருவண்ணாமலை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபுகளை மீறியதாகவும் தமிழ்நாட்டை தமிழகம் என்றும்; திராவிட மாடல் அரசு என்றும்; அம்பேத்கர், பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் சமூக நீதி போன்ற வார்த்தைகளை பேச மறுத்தும் இறையாண்மைக்கு எதிராக சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்னால் வெளிநடப்பு செய்யவும் செய்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையென்றால், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறி, திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST