தமிழ்நாடு

tamil nadu

இலவச பெட்ரோல்

ETV Bharat / videos

ஹெல்மெட் அணிந்து பைக் இயக்கிய பெண்களுக்கு இலவச பெட்ரோல் - தஞ்சையில் தரமான செய்கை! - ஹெல்மெட் அணிந்த பெண்களுக்கு இலவச பெட்ரோல்

By

Published : Apr 6, 2023, 5:19 PM IST

தஞ்சாவூர்: இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி வருகிறது. சாலை விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், போக்குவரத்து போலீசாரால் அறிவுரையும் வழங்கப்படுகிறது. வாகன எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றன. 

இதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், விபத்தில்லா மாவட்டமாக மாற, அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபு ராஜ்குமார், போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு செயலானது கவனம் பெற்றுள்ளது. 

அதன்படி, அவர், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கும் பெண்களுக்கு, இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கினார். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 50 மகளிருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோலும் விநியோகிக்கப்பட்டது. 

குடும்பத்தில் உள்ள பிறரும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது, ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என, மகளிரிடம் போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். சாலைப் பாதுகாப்பு குறித்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எடுத்துரைப்பதாக பெண்கள் உறுதி அளித்தனர். போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடித்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டதால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

இதையும் படிங்க: 'காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவது இல்லை' - காவலர்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details