video:அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து யானை ஆக்ரோஷம்!
ஈரோடு: கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அரசுப் பேருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக கொள்ளேகால் - சத்தியமங்கலம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. கெத்தேசால் அருகே சென்றபோது சாலையில் காட்டு யானை நடமாடுவதைக் கண்ட பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அப்போது காட்டு யானை திடீரென ஆக்ரோசத்துடன் தனது தும்பிக்கையால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை ஓங்கி அடித்ததில், முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கண்ணாடியை காட்டு யானை உடைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.