Video: 'ஆடித்திருவிழா' இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்! - A large number of devotees visit Sami on the occasion of the festival
விருதுநகர்: சாத்தூர் அருகே தென்தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக்காண தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். இந்த நிலையில் இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் இன்று வெகு சிறப்பாக தொடங்கின. இந்த கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST