ரயில் பாதையில் வாக்கிங் செல்லும் யானைகள் - யானைகள்
நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை கூட்டம் உலா வருகிறது. இதில் தனது குட்டியுடன் காட்டு யானை ஒன்று மலை ரயில் பாதையில் ஹாயாக நடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. மலை ரயில் பாதையில் யானைகள் நடமாட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. மேலும் யானைகளும் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் ரயில் பாதையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST