ஆனந்த குளியல் போடும் யானை அகிலா - kovil yanai kuliyal
திருச்சி: திருவனைகோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இறை பணியாற்றி வரும் அகிலா என்ற யானைக்கு ஏற்கனவே குளிப்பதற்காக நீச்சல்குளம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப் படியும் இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தலின்படி கோயில் உள்ள நாச்சியார் தோப்பில் ஏற்கனவே இருந்து வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில் குளிப்பதற்காக புதியதாக 1200 சதுரடியில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், யானை அகிலா ஆனந்த குளியல் போடுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST