பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் நிறைவடைந்த இறுதிகட்ட பரப்புரை
திருநெல்வேலி: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்ரவரி 19) நடைபெறவுள்ள நிலையில் இன்று (பிப்ரவரி 17) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. முன்னதாக வேட்பாளர்கள் இன்று இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு நூதன யுக்திகளைக் கையாண்டு வாக்காளர்களின் கவனத்தைப் பெற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST