கோவை ரெய்டு: அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை
கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இன்று (மார்ச் 15) லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேலின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் திமுக அரசையும், அதிகாரிகளையும் எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST